ஜீவாவும் மிர்ச்சி சிவாவும் நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள்; இயக்குநர் பொன்குமரன்

மொரீஷியஸில் படமாக்கப்படும் கோல்மால்
ஜீவாவும் மிர்ச்சி சிவாவும் நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள்; இயக்குநர் பொன்குமரன்
சிவா, ஜீவா

ஜாகுவார் ஸ்டுடியோஸின் பி. வினோத் ஜெயின் தயாரிப்பில் பொன்குமரன் இயக்கத்தில், ஜீவா-மிர்ச்சி சிவா நடிக்கும் கோல்மால் படத்தின் முக்கிய காட்சிகள் மொரீஷியஸில் படமாக்கப்பட்டுள்ளன.

கே.பாக்யராஜ் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரின் உதவியாளராக இருந்த பொன்குமரன், ரஜினிகாந்தின் லிங்கா படத்துக்கு கதை எழுதியவர். விஷ்ணுவர்தனா, ஏஜமானா ஆகிய வெற்றிகரமான கன்னட படங்களையும், தமிழ்-கன்னட இருமொழி திரைப்படமான ‘சாருலதா’வையும் இயக்கியுள்ள பொன்குமரன் இயக்கும் நேரடித் தமிழ்ப் படம் கோல்மால்.

"கடந்த மாதம் மொரீஷியஸில் படப்பிடிப்பை ஆரம்பித்து சுமார் 25 நாட்கள் முக்கியப் பகுதிகளை படமாக்கியுள்ளோம். அனைத்துக் காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளன. முழுநீள நகைச்சுவைப் படமாக அனைத்துப் பிரிவினரும் ரசிக்கக் கூடிய வகையில் கோல்மால் இருக்கும்.

‘கோல்மால்’ படத்தில்...
‘கோல்மால்’ படத்தில்...

ஜீவா, மிர்ச்சி சிவா இருவரும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரியும் பேசப்படும். பாயல் ராஜ்புத், தான்யா ஹோப், யோகி பாபு, ஆடுகளம் நரேன், மனோபாலா, சுப்பு பஞ்சு, வையாபுரி, யூகி சேது, சஞ்சனா சிங், சாது கோகிலா, விபின் சித்தார்த், ரமேஷ் கண்ணா, கேஎஸ்ஜி வெங்கடேஷ், மாளவிகா, ஜார்ஜ் மரியன் மற்றும் மது சினேகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்” என்று இயக்குநர் பொன்குமரன் கூறினார்.

மொரீஷியஸில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த கோல்மால் படக்குழு கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விடுமுறைக்காக சென்னை திரும்பியுள்ளனர். சென்னையில் சில முக்கிய காட்சிகளை படமாக்கிய பின்னர், ஜனவரி மாதம் மொரிஷியஸுக்கு கோல்மால் குழுவினர் மீண்டும் செல்லவுள்ளனர்.

2022-ம் ஆண்டின் ஏப்ரல் - மே மாதங்களில் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

‘கோல்மால்’ படத்தில்...
‘கோல்மால்’ படத்தில்...

Related Stories

No stories found.