ஜெயம் ரவி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஜெயம் ரவி படத்தின் பர்ஸ்ட் லுக்  வெளியீடு

ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்துக்கு ’அகிலன்’ என்றஉ தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

லக்ஷ்மண் இயக்கிய ’பூமி’ படத்துக்குப் பிறகு, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜெயம் ரவி. பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில், அவர் அருண்மொழிவர்மனாக நடிப்பதாகவும் இந்தப் படத்தின் முதல் பாகம் மே மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

அகிலன் - ஜெயம் ரவி
அகிலன் - ஜெயம் ரவி

இந்தப் படத்தை அடுத்து ’பூலோகம்’ பட இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் படத்தில், ஜெயம் ரவி நடித்து வருகிறார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஹரீஷ் உத்தமன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

சாம் சி எஸ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் தலைப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டது. படத்துக்கு’அகிலன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அதற்கு கீழ் ’இந்தியப் பெருங்கடலின் அரசன்’ என்று கேப்ஷன் வைத்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் ஜெயம் ரவி கப்பலில் பணியாற்றுபவராக தோற்றமளிக்கிறார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in