சென்னையில் ‘ஜவான்’ இசை வெளியீடு: நடிகர் விஜய் பங்கேற்பு! செம மாஸ் ‘குட்டி’ கதை ரெடி!

நடிகர்கள் விஜய் மற்றும் ஷாருக்கானுடன் அட்லி...
நடிகர்கள் விஜய் மற்றும் ஷாருக்கானுடன் அட்லி...

’ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறும் என்கிற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், இதில் நடிகர் விஜய் கலந்து கொள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ’ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பான் இந்தியா படமான இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது.

தான் பாலிவுட்டில் படங்களை இயக்க சென்றாலும் தமிழ் நடிகர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் பயன்படுத்திக் கொள்வேன் என அட்லி சொல்லி இருந்தார். அது போலவே அனிருத், நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகிபாபு என பலரும் இதில் நடித்துள்ளனர்.

’ஜவான்’ படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா...
’ஜவான்’ படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா...

இதுமட்டுமல்லாது, நடிகர் விஜய்யும் இந்த படத்தில் கேமியோவில் நடித்துள்ளார் எனவும், அவரது காட்சிகள் கொண்ட புதிய டிரெய்லர் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தில் பிளாஷ்பேக் போர்ஷனில் நடிகர் ஷாருக்கானின் தோற்றமும் இதில் வெளியாகும் எனவும் விழாவில் நடிகர்கள் விஜய், நயன்தாரா, தீபிகா படுகோனே ஆகியோரும் கலந்து கொள்வார்கள் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

’ஜவான்’ படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், மற்ற பாடல்களும் இந்த விழாவில் வெளியாக உள்ளது. ரஜினிக்கு குட்டி கதைச்சொல்ல ‘லியோ’ இசை வெளியீடு வரை காத்திருக்காமல் இந்த மேடையை நடிகர் விஜய் பயன்படுத்திக் கொள்வார் என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in