ஜப்பான் நகரங்கள் மீது அணுகுண்டு தாக்குதல்
ஜப்பான் நகரங்கள் மீது அணுகுண்டு தாக்குதல்

அணுகுண்டு தாக்குதலுக்கு ஆளான ஜப்பானில் ஒருவழியாக ‘ஓபன்ஹெய்மர்’ ரிலீஸ்... ரசிகர்கள் பெரும் தவிப்பு

ஜப்பான் தேசத்தில் ஒருவழியாக ஓபன்ஹெய்மர் திரையிடல் சாத்தியமாகி உள்ளது. எனினும் ஜப்பான் ரசிகர்கள் பதைபதைப்புடனே ஓபன்ஹெய்மர் திரைப்படத்தை திரையரங்குகளில் எதிர்கொண்டு வருகின்றனர்.

சமகாலத்தில் ஹாலிவுட்டின் மாஸ் மற்றும் கிளாஸ் இயக்குநர்களில் பெரும் எதிர்பார்ப்புக்குரியவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் உருவான `ஓப்பன்ஹெய்மர்' திரைப்படம், கடந்தாண்டு சர்வதேச அளவில் பல்வேறு மொழிகளில் வெளியானது. ஆனால் கதையின் முக்கிய களமாக இடம்பெறும் ஜப்பானில் இந்த திரைப்படம் வெளியாகவில்லை.

ஜப்பான் நகரங்கள் மீது அணுகுண்டு தாக்குதல்
ஜப்பான் நகரங்கள் மீது அணுகுண்டு தாக்குதல்

இரண்டாம் உலகப்போரில், அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் துறைமுகத்தில் ஜப்பானின் போர் விமானங்கள் தாக்குதல் தொடுத்ததும், அமெரிக்கா வெகுண்டெழுந்து அணுகுண்டுகளை கையில் ஏந்தியது. ஹிரோஷிமா, நாகசாகி என ஜப்பான் நகரங்களின் மீது அணுகுண்டுகளை வீசியது. இதனால் விளைந்த நாசத்துக்கு இன்று வரை அந்த ஜப்பானிய நகரங்களும், ஜப்பானியர்களும் விலைகொடுத்து வருகின்றனர்.

மேற்படி நாசகார அணுகுண்டுகளின் பிதாமகனான ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் உருவாக்கிய அணுகுண்டுகளால், அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்தது. அதனையடுத்து இரண்டாம் உலகப்போரும் முடிவுக்கு வந்தது. இன்றைக்கும் உலக நாடுகள் அணு ஆயுதங்களை முன்வைத்து பரஸ்பரம் மிரட்டல் காட்டினாலும், எவருக்கும் அதனை பயன்படுத்தும் துணிவு இல்லை. அதற்கான அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் விதைத்ததன் பின்னணியில் ஓபன்ஹெய்மர் ஒளிந்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை திரையிட்ட யுனிவர்சல் பிக்சர்ஸ் ஜப்பானை கவனமாக தவிர்த்து இருந்தது. படம் வெளியாகி சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓபன்ஹெய்மர் இன்று அங்கே திரையிடப்பட்டது. அண்மையில் ஆஸ்கர் அகாடமி விருதுகளில் அதிக எண்ணிக்கையில் வாரிக்குவித்த இந்த திரைப்படம், வசூல் ரீதியாக கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலகளவில் வசூலித்துள்ளது. திரையரங்குகளை அடுத்து ஓடிடிக்கும் ஓபன்ஹெய்மர் தாவியுள்ளது.

ஓபன்ஹெய்மர் திரைப்படம்
ஓபன்ஹெய்மர் திரைப்படம்

எனினும் ஹாலிவுட் திரைப்படங்களின் முக்கிய சந்தையாக விளங்கும் ஜப்பானில் நீண்ட தயக்கத்துக்கு பின்னரே ஓபன்ஹெய்மர் வெளியிடப்பட்டுள்ளது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட அமெரிக்காவின் அணுகுண்டுகளால் 2,00,000 உயிர்கள் பலியானது உட்பட, ஏராளமான வடுக்களை இன்றைக்கும் ஜப்பான் மண்ணும் மனிதர்களும் சுமந்திருக்கின்றனர்.

எனவே, ஜப்பானியர்களை உணர்வு ரீதியாக பாதிக்க வாய்ப்புள்ள ஓபன்ஹெய்மர் திரைப்படத்தை நீண்ட பரிசீலனைக்குப் பின்னர், இன்றைய தினம் திரையிடலை தொடங்கியுள்ளது. ஜப்பானியர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. திரையரங்க வாசலிலும், படத்தின் தொடக்கத்திலும் ஜப்பானியர் ரசிகர்களை எச்சரிக்கும் வாசகங்கள் காட்டப்படுகின்றன. அதனையும் மீறியே ஜப்பானியர்கள் ஓபன்ஹெய்மரை ரசிக்கத்தலைப்படுகிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in