’அந்த டைரக்டர் படத்துல நடிக்கணும்’: ஜான்வி கபூருக்குப் பிடித்த தென்னிந்திய இயக்குநர் யார்?

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

நடிகை ஜான்வி கபூர், தான் பணியாற்ற விரும்பும் தென்னிந்திய இயக்குநர் பற்றி தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகளான ஜான்வி கபூர், இப்போது ’குட்லக் ஜெர்ரி’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இது நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் தமிழில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ’கோலமாவு கோகிலா’ படத்தின் ரீமேக். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார்.

’குட்லக் ஜெர்ரி’ படத்தை சித்தார்த் செங்குப்தா இயக்கியுள்ளார். தீபக் டோப்ரியால், மிடா வசிஷ்ட், சீரஜ் சூட் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் 29-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரிடம், தென்னிந்திய சினிமாவில் எந்த இயக்குநர் படத்தில் பணியாற்ற விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

ஜான்வி கபூர், அல்போன்ஸ் புத்திரன்
ஜான்வி கபூர், அல்போன்ஸ் புத்திரன்

அதற்குப் பதிலளித்த ஜான்வி, “அல்போன்ஸ் புத்திரன்” என்று கூறினார். “அவர் இயக்கிய ’பிரேமம்’ படத்தைப் பார்த்தேன். சிறப்பாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உண்மையிலேயே அவருடைய படத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார் ஜான்வி.

அல்போன்ஸ் புத்திரனின் ’பிரேமம்’ படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா ஜெபாஸ்டியன் உட்பட பலர் நடித்திருந்தனர். இது கடந்த 2015ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in