திருப்பதியில் நடிகை ஜான்வி சாமி தரிசனம்

திருப்பதியில் நடிகை ஜான்வி சாமி தரிசனம்

தனது பிறந்த தினத்தை முன்னிட்டு, நடிகை ஜான்வி கபூர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இப்போது தோஸ்தானா 2 படத்தில் நடித்து வருகிறார். ’கோலமாவு கோகிலா’ படத்தின் ரீமேக்கான ’குட்லக் ஜெர்ரி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை ஆனந்த்.எல்.ராய் இயக்கியுள்ளார். அடுத்து மலையாள ‘ஹெலன்’ படத்தின் ரீமேக்கான ’மிலி’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

தோழிகளுடன் ஜான்வி
தோழிகளுடன் ஜான்வி

இந்நிலையில் நடிகை ஜான்விக்கு இன்று 25வது பிறந்தநாள். இதையடுத்து தனது தோழிகளுடன் அவர் திருப்பதி சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர், தோழிகளுடன் திருப்பதி வளாகத்தில் அமர்ந்தபடி, புடைவை கட்டி புகைப்படங்கள் எடுத்துள்ளார். அவை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இதற்கிடையே இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஜான்விக்கு பாலிவுட் திரையுலகினர், ரசிகர்கள், வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in