தனது வீட்டை ரூ.44 கோடிக்கு பிரபல நடிகரிடம் விற்ற ஹீரோயின்

தனது வீட்டை ரூ.44 கோடிக்கு பிரபல நடிகரிடம் விற்ற ஹீரோயின்

பிரபல இந்தி நடிகை, தனது வீட்டை நடிகர் ஒருவருக்கு ரூ.44 கோடிக்கு விற்றுள்ளார்.

பிரபல இந்தி நடிகை ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவி- போனி கபூர் தம்பதியின் மகளான இவர் நடிப்பில் ‘குட்லக் ஜெர்ரி’ என்ற படம் சமீபத்தில் வெளியானது. இது நயன்தாரா நடிப்பில் தமிழில் வெளியான ’கோலமாவு கோகிலா’ படத்தின் ரீமேக். ஓடிடி தளத்தில் வெளியான குட்லக் ஜெர்ரி படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அடுத்து மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ’ஹெலன்’ படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

ஜான்வி கபூர், ராஜ்குமார் ராவ்
ஜான்வி கபூர், ராஜ்குமார் ராவ்

இவர், மும்பை ஜுஹு பகுதியில் ஆரயா பில்டிங் என்ற அபார்ட்மென்ட்டில் 14, 15 மற்றும் 16-வது மாடிகளில் அமைந்துள்ள பிளாட்களை கடந்த 2020ம் வருடம் வாங்கினார். ரூ.39 கோடி ரூபாய்க்கு இந்த பிளாட்களை வாங்கிய அவர், இதற்கான பத்திரப்பதிவுக்கு மட்டும் ரூ.78 லட்சம் செலவழித்தார். தற்போது இந்த பிளாட்களை பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவுக்கு அவர் விற்றுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரூ.44 கோடிக்கு அவர் அதை விற்றுள்ளார். ஜூலை 21ம் தேதி இதற்கான பத்திரப்பதிவு நடந்துள்ளது.

நடிகர் ராஜ்குமார் ராவ், கேங்ஸ் ஆப் வாஸிபூர் 2, தலாஸ், கை போ சே, குயின், அலிகார், மேட் இன் சைனா, சாஹித், பதாய் தோ உட்பட பல இந்திப் படங்களில் நடித்துள்ளார். ’சாஹித்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in