‘யூகங்களை நம்ப வேண்டாம்' - என்ன சொல்ல வருகிறார் ஜான்வி கபூர்

‘யூகங்களை நம்ப வேண்டாம்' - என்ன சொல்ல வருகிறார் ஜான்வி கபூர்

தமிழ், தெலுங்கு சினிமாவில் அறிமுகமாவதாக வெளியான தகவல் பற்றி நடிகை ஜான்வி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா 'நேட்டோ' படம் மூலம் தமிழுக்கும் வந்தார். இவர், இப்போது ’லைகர்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். இதை புரி ஜெகநாத் இயக்குகிறார். இந்தி நடிகை அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கிறார். மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தெலுங்கு, இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், புரி ஜெகநாத், விஜய் தேவரகொண்டா மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைகின்றனர்.

பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப் படத்துக்கு ’ஜனகனமண’ என்று டைட்டில் வைக்க முடிவு செய்திருந்தனர். மலையாளத்தில் இதே தலைப்பில் படம் உருவாகியுள்ளதால், தலைப்பை ஜேஜிஎம் (JGM) என்று வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக, மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளும் இந்தி நடிகையுமான ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இதை மறுத்துள்ள ஜான்வி, ‘யூகங்களை நம்ப வேண்டாம். தமிழ், தெலுங்கில் எந்த படத்திலும் நான் நடிக்கவில்லை. அப்படி ஏதாவது ஒப்பந்தம் செய்திருந்தால், நானோ, தயாரிப்பு நிறுவனமோ அதிகாரபூர்வமாக அறிவிப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in