ஜெய்யின் ‘வீரபாண்டியபுரம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெய்யின் ‘வீரபாண்டியபுரம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெய் நடிக்கும் 'வீரபாண்டியபுரம்' படத்துக்கு தணிக்கைத்துறை யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இயக்குநர் சுசீந்திரன் இரண்டு படங்களை இயக்கினார். ஒன்று, சிம்பு நடித்த ஈஸ்வரன். மற்றொன்று ஜெய் நடித்த ’சிவ சிவா’. ’ஈஸ்வரன்’ படம் கடந்த வருடம் வெளியானது.

இந்நிலையில் ’சிவ சிவா’ படம் இப்போது வெளியாகிறது. இந்தப் படத்தின் மூலம் நடிகர் ஜெய் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். ஜெய் ஜோடியாக ஆகன்க்ஷா சிங், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கின்றனர்.

நடிகர் ஜெய்
நடிகர் ஜெய்

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு பாஸ்கர் சக்தி வசனம் எழுதி இருக்கிறார். லெண்டி ஸ்டூடியோஸ் சார்பில், எஸ்.ஐஸ்வர்யா தயாரித்துள்ள இந்தப் படத்தின் தலைப்பை ’வீரபாண்டியபுரம்’ என்று சமீபத்தில் மாற்றினர்.

நண்பர்கள் கேட்டுக்கொண்டதால், படத்தின் தலைப்பை மாற்றியதாக இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்திருந்தார். இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்துக்கு தணிக்கைத்துறை யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து வரும் 18 ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in