
’கே.ஜி.எஃப்2’ படத்தின் சாதனையை ‘ஜெயிலர்’ திரைப்படம் முறியடித்துள்ளது.
’ஜெயிலர்’ திரைப்படம் நாளை மறுநாள் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கும் நிலையில், படம் குறித்தான பல செய்திகளும் ரசிகர்கள் மத்தியில் கவனம் குவித்து வருகிறது. இந்நிலையில், பெங்களூரு, கர்நாடகாவில் ரஜினிக்கென நிறைய ரசிகர்கள் இருப்பதால் ‘ஜெயிலர்’ படத்திற்கு கர்நாடகாவிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 1090 காட்சிகள் பெங்களூருவில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பெரும் வெற்றிப் பெற்ற ‘கே.ஜி.எஃப்2’ திரைப்படத்திற்கு 1037 காட்சிகள் திரையிடப்பட்டதே முந்தைய சாதனையாக இருந்தது.
‘அவதார்2’ படத்திற்கு 1014 காட்சிகள் திரையிடப்பட்டது. ‘கே.ஜி.எஃப்2’ சாதனையை ‘ஜெயிலர்’ திரைப்படம் முறியடித்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், இந்தப் படத்தில் சிவராஜ் குமார் நடித்திருப்பதும் ‘ஜெயிலர்’ படத்திற்கு பெங்களூருவில் கூடுதல் கவனம் இருக்க முக்கியக் காரணம் எனவும் சொல்கிறார்கள்.