முதல் நாளிலேயே நடிகர் ரஜினிகாந்த்தின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் டிக்கெட்டுக்கள் ரூ.8 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் அதன் டிக்கெட் விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் மட்டும் கிட்டத்தட்ட ஆறு லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் தமிழகத்தில் விற்றுத் தீர்ந்துள்ளது. இதன் மூலம் அட்வான்ஸ் புக்கிங்காக 8 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது ‘ஜெயிலர்’.
இதுமட்டுமல்லாது, உலகம் முழுவதும் பாக்ஸ் ஆஃபிசிஸ் முதல் நாள் 60 கோடி ரூபாயை வசூலிக்கும் எனவும் படக்குழு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சன் டிவி அலுவலகத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினருக்கு ‘ஜெயிலர்’ படம் பிரத்யேகமாக திரையிடப்பட்டதாகவும் படம் ரஜினிக்கு திருப்தி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.