இன்று மாலை வெளியாகிறது 'ஜெயிலர்' படத்தின் இரண்டாவது சிங்கிள்!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்இன்று மாலை வெளியாகிறது 'ஜெயிலர்' படத்தின் இரண்டாவது சிங்கிள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில் தயாராகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. ஆக்‌ஷன் கலந்த ஜனரஞ்சகமான திரைப்படமாக உருவாகி வரும் இதில் முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலர் பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தமன்னா, மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் 'வா நு காவலயா' கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு, இணையத்தில் கலக்கி வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை 'ஹூக்கும் இது டைகர் கட்டளை' என்ற இரண்டாவது சிங்கிள் பாடலுக்கான முன்னோட்டம் வெளியாகிறது. முழுமையான பாடல் வரும் 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in