இன்று ’ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இன்று இயக்குநர் நெல்சன், நடிகர்கள் சுனில், வசந்த்ரவி உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்ச்சியில், இயக்குநர் நெல்சன், ''’ஜெயிலர்’ திரைப்படம் இந்த அளவுக்கு வெற்றி பெறும் என நினைக்கவே இல்லை. உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு இவ்வளவு பாராட்டுகள் வந்ததற்கு காரணம் கதை மீது ரஜினி சாருக்கு இருந்த நம்பிக்கை தான். தான் எதிர்பார்த்ததை விட பத்து மடங்கு படம் சூப்பராக வந்திருப்பதாகத் தெரிவித்தார். சுனில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பாரா என்று சந்தேகம் இருந்தது. ஆனால், அதிக ஒத்துழைப்பு கொடுத்தார். படத்திற்கு பட்ஜெட் அதிகமானாலும் தயாரிப்பாளர் தரப்பு அதற்கு எதுவும் சொல்லாமல் உடனே கொடுத்தார்கள்.
ரஜினி சாரின் கண்களுக்கு அதிக ஷாட் ஏன் எனக் கேட்டார்கள். படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போதே அவர் கண்கள் பேசும். அவரின் பாடி லாங்வேஜ் கண்களில் தான் இருக்கும். அதனால் தான் கண்களுக்கு அதிக ஷாட் வைத்திருப்போம். அந்த ஐடியாவை சொன்னது ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்தி தான்” என்றார்.