மாணவிகளுக்கு கணினி; ஏழைகளுக்கு காய்கறி... ஜெயிலர் வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள்!
’ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்காக கணினி, காய்கறி தொகுப்பு கொடுத்து ரஜினி ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.
கோவில்பட்டியில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு 2 லட்ச ரூபாய் மதிப்பிலான கணினி மற்றும் 200 மேற்பட்டோர் குடும்பத்திற்கு காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வேலாயுபுரத்தில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் ஜெயிலர் படம் 60 வது நாள் வெற்றி விழாவை முன்னிட்டு மாவட்ட பொறுப்பாளர் விஜய் ஆனந்த் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் இலவசமாக கணினி பயிற்சி பெறும் வகையில் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான கணினியை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர். மேலும் 200க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி தொகுப்பு அடங்கிய பைகளையும் வழங்கினர்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்ற இணை செயலாளர் சக்தி முருகன் , துணைச் செயலாளர் சுவாமிநாதன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.