`ஜெயிலர்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மாஸ் லுக் வெளியீடு!

`ஜெயிலர்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மாஸ் லுக் வெளியீடு!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் மாஸ் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

ரஜினியின் 169-வது படமான `ஜெயிலர்' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இதில், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் வேறு சில படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால், இதில் நடிக்க இயலவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக இப்போது நடிகை தமன்னா, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதைப் படக்குழு உறுதி செய்துள்ளது. இந்தப் படத்துக்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் ஆஸ்தான ஹேர் ஸ்டைலிஷ்ட் ஆலிம் ஹக்கிம் (Aalim Hakim) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர், ரஜினிகாந்தின் லுக்கை மொத்தமாக மாற்ற இருக்கிறார் என்று தெரிகிறது.

இந்நிலையில் சென்னையில் `ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு இன்று நடைபெறுகிறது. இதையடுத்து, ‘ஜெயிலர்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மாஸ் லுக்கை பட நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. சிறையில் ரஜினி நடந்து வரும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த மாஸ் லுக் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in