‘என்னையும் கமலையும் போலீஸ் வாகனங்கள் சுற்றி வளைத்தன’

‘என்னையும் கமலையும் போலீஸ் வாகனங்கள் சுற்றி வளைத்தன’

``நடிகர் கமல்ஹாசனுடன் அமெரிக்காவில் கைதாகும் நிலையில் இருந்து தப்பினேன்'' என்று பிரபல இந்தி நடிகர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 படங்களில் நடித்திருப்பவர் இந்தி நடிகர் ஜெய்தீப் அலாவத் (Jaideep Ahlawat). இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவரும் நடிகர் ஜீஷான் ஆயுப்பும் இணைந்து, பிளடி பிரதர்ஸ் (Bloody Brothers) என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார்கள். க்ரைம் த்ரில்லர் காமெடி தொடரான இது, ஜீ 5 தளத்தில் வரும் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த தொடரின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகர் ஜெய்தீப் அலாவத், விஸ்வரூபம் படப்பிடிப்பின் போது அமெரிக்காவில் நடந்த அனுபவத்தைப் பகிரிந்துகொண்டார்.

ஜெய்தீப் அலாவத்துடன் கமல்ஹாசன்
ஜெய்தீப் அலாவத்துடன் கமல்ஹாசன்

``2013ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினம். அதனால் அமெரிக்கா அதிக உஷாராக இருந்தது. நியூயார்க்கின் மான்ஹாட்டன் நகரில் உள்ள பாலம் ஒன்றில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. நான்கைந்து சொகுசு கார்களைக் கொண்டு இந்தக் காட்சி படமாக்கப்பட்டது. ஒரு காரில் நான், கமல்ஹாசனுடன் அமர்ந்திருந்தேன். ஒவ்வொரு முறையும் கார் பாலத்தின் சென்று திரும்பி வரும்போது, சுங்கச் சாவடியை கடக்க வேண்டும். மூன்றாவது முறையாக கார் வந்தபோது, பத்து போலீஸ், வாகனங்கள் எங்களைச் சுற்றி வளைத்துவிட்டன. நாங்கள் கைகளை மேலே தூக்கி வைத்தபடி, ’மனசுக்குள் சுட்டுறாதீங்கப்பா’ என்று நினைத்துக் கொண்டோம். பிறகு படப்பிடிப்பு நடத்துகிறோம் என்று விளக்கிய பின் எச்சரித்து அனுப்பினார்கள். அப்போது, கமல்ஹாசனையும் என்னையும் அவர்கள் கைது செய்திருந்தால், இன்னும் பிரபலமாகி இருக்கலாம் என காமெடியாக நினைத்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.