சுசீந்திரன் இயக்கும் படத்தின் பெயர் திடீர் மாற்றம்

சுசிந்திரன்
சுசிந்திரன்

ஜெய் நடிக்கும் ’சிவ சிவா’ படத்தின் தலைப்பு, 'வீரபாண்டியபுரம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இயக்குநர் சுசிந்திரன் இரண்டு படங்களை இயக்கினார். ஒன்று, சிம்பு நடித்த ஈஸ்வரன். மற்றொன்று ஜெய் நடித்த சிவ சிவா. ஈஸ்வரன் படம் கடந்த வருடம் வெளியானது.இந்நிலையில் சிவ சிவா படத்தை இப்போது வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.

இந்தப் படத்தின் மூலம் நடிகர் ஜெய் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். ஜெய் ஜோடியாக ஆகன்க்ஷா சிங், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு பாஸ்கர் சக்தி வசனம் எழுதி இருக்கிறார்.

லெண்டி ஸ்டூடியோஸ் சார்பில், எஸ்.ஐஸ்வர்யா தயாரித்துள்ள இந்தப் படத்தின் தலைப்பை ’வீரபாண்டியபுரம்’ என்று இப்போது மாற்றியுள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’சிவ சிவா’ படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஃபைனல் மிக்சிங்கில் இந்தத் திரைப்படத்தைப் பார்த்த என் நண்பர்கள், என்னையும் படக்குழுவினரையும் பாராட்டினார்கள். அவர்கள், இது கிராமம் சார்ந்த திரைப்படம் என்பதால், மண் சார்ந்த தலைப்பு இருந்தால் படத்துக்கு கூடுதல் பலம்சேர்க்கும் என்று கூறினார்கள். அதில் எனக்கும் உடன்பாடு ஏற்பட்டதால், தயாரிப்பாளர் சம்மதத்துடன் ’சிவ சிவா’ என்ற தலைப்புக்கு பதிலாக ’வீரபாண்டியபுரம்’ என்ற தலைப்பு தேர்வு செய்துள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in