ஜீவஜோதி கதையை படமாக்கும் இயக்குநர் தா.செ.ஞானவேல்!

ஜீவஜோதி கதையை படமாக்கும் இயக்குநர் தா.செ.ஞானவேல்!

‘ஜெய் பீம்’ இயக்குநரின் அடுத்த படம், இன்னுமொரு பரபரப்பான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.

நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உட்பட பலர் நடித்த படம், ’ஜெய் பீம்’. தா.செ.ஞானவேல் இயக்கிய இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதை அடுத்து, சூர்யா நடிக்கும் இன்னொரு படத்தையும் அவர் இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால், அவர் மற்றொரு உண்மைச் சம்பவத்தை இயக்க இருக்கிறார்.

தா.செ.ஞானவேல்
தா.செ.ஞானவேல்

ஹோட்டல் சரவணன் பவன் அதிபர் ராஜகோபால்-ஜீவஜோதியின் வழக்கை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக இருக்கிறது. 18 வருடங்களாக நடந்த இந்த வழக்கு, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கு தொடர்பான விஷயங்களை வைத்து ஞானவேல் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியில் தயாராகும் இந்தப் படத்தை, ஜங்கிளி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் இந்தியில் தல்வார், ராஸி, பதாய் ஹோ, பதாய் தோ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது. ஞானவேலின் இந்தப் படத்துக்கு ‘தோசா கிங்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜீவஜோதி கேரக்டரில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகையிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in