நொய்டா பட விழாவில் `ஜெய் பீம்’

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம்
 சூர்யா
சூர்யா

சூர்யாவின் ‘ஜெய்பீம்’ திரைப்படம், நொய்டாவில் நடைபெறும் 9வது சர்வதேச திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வ திரையிடலுக்கு தேர்வாகியுள்ளது.

த.செ.ஞானவேல் இயக்கித்தில் சூர்யா, மணிகண்டன், லிஜிமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்து வரவேற்பைப் பெற்ற ’ஜெய்பீம்’. இதை சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான கதையை கொண்டது.

ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற, இந்தத் திரைப்படத்தின் சில காட்சிகளையும் இயக்குநர் ஞானவேல், படம் பற்றி பேசும் சில காட்சிகளையும் ஆஸ்கர் அமைப்பு தனது அதிகாரபூர்வ யூடியூப் தளத்தில் சமீபத்தில் பகிர்ந்திருந்தது. ’சீன் அட் தி அகாடமி‘ என்ற தலைப்பில் வெளியானது இந்தக் காட்சிகள்.

தமிழ்த் திரைப்படம் ஒன்றின் காட்சிகள், ஆஸ்கர் அமைப்பின் அதிகாரபூர்வ யூடியூப் தளத்தில் இடம்பெற்றிருப்பது இதுவே முதன்முறை. இது, தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம், நொய்டாவில் நடைபெறும் 9வது சர்வதேச திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வ திரையிடலுக்கு தேர்வாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in