ஜக்கி கொடுத்த அட்வைஸ்: 2-வது திருமணத்திற்கு நடிகை சமந்தா சம்மதம்?

நடிகை சமந்தா
நடிகை சமந்தாஜக்கி கொடுத்த அட்வைஸ்: 2-வது திருமணத்திற்கு நடிகை சமந்தா சம்மதம்?

சத்குரு ஜக்கி வாசுதேவ் கொடுத்த அட்வைஸ் காரணமாக நடிகை சமந்தா 2-வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ‘ஏ மாயா சேசவே’. இப்படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் நடிகர் நாகசைதன்யா, நடிகை சமந்தா இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் தான் சமந்தா நடிகையாக அறிமுகமானார். இப்படம் தமிழில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' என கௌதம் மேனனால் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகை சமந்தா கெஸ்ட் ரோலில் நடத்திருப்பார்.

இதன் பின்' பானா காத்தாடி' படத்தின் மூலம் சமந்தா கதாநாயகியானார். இதன பின் ‘மாஸ்கோவின் காவிரி, 'நீதானே என் பொன்வசந்தம்', 'அஞ்சான்', 'கத்தி', 'தங்கமகன்', 'தெறி', 'சூப்பர் டீலக்ஸ்', 'காத்து வாக்குல ரெண்டு காதல்’ என பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா, தனது முதல் பட ஹீரோவான நாகசைதன்யாவை 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் 2021 அக்.2-ம் தேதி விவகாரத்து செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த நிலையில் நடிகை சமந்தா மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அதற்கான சிகிச்சையை மேற்கொண்டவாறே திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருவதுடன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக நடிகை சமந்தா இயங்கி வருகிறார். சமந்தா நடிப்பில் ‘குஷி', 'சாகுந்தலம்’ என இரண்டு தெலுங்கு படங்கள் வெளிவர உள்ளன.

இந்த நிலையில் நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. சத்குரு ஜக்கி வாசுதேவ் கொடுத்த அட்வைஸால் நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in