`கொஞ்சம் ஓவராகத்தான் போயிட்டார்’: வில் ஸ்மித் பற்றி மனைவி

மனைவி ஜடா பிங்கெட்டுடன் வில் ஸ்மித்
மனைவி ஜடா பிங்கெட்டுடன் வில் ஸ்மித்

ஆஸ்கர் விருது விழாவின் போது வில் ஸ்மித் கொஞ்சம் அதிகமாகவே நடந்துகொண்டார் என்று அவரது மனைவி ஜடா பிங்கெட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கிறிஸ் ராக், நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட்டின் மொட்டை தலை குறித்து கிண்டலாகப் பேசினார். ஜடா பிங்கெட், அலோபீசியா என்ற ஒருவகை முடி உதிர்தல் நோயால் பாதிக்கப்பட்டதால் மொட்டை அடித்துள்ளார்.

கிறிஸ் ராக் பேசியதை தாங்கிக் கொள்ளாத வில் ஸ்மித், மேடைக்குச் சென்று அவர் கன்னத்தில் அறைந்தார். இது பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்னர் இந்தச் சம்பவத்திற்காக நடிகர் வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டார்.

கிறிஸ் ராக்கை அறையும் ஸ்மித்
கிறிஸ் ராக்கை அறையும் ஸ்மித்

ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து அவர் விலகியுள்ளார்.

இந்நிலையில் வில் ஸ்மித் அந்த விழாவில் நடந்துகொண்ட விதம் பற்றி கருத்துச் சொல்லாமல் இருந்தா ஜடா பிங்கெட் இப்போது தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாக ஜடாவுக்கு நெருங்கியவர்கள் அமெரிக்க பத்திரிகை ஒன்றில் கூறியுள்ளார். அதில், வில் ஸ்மித் அப்போது கொஞ்சம் அதிகமாகவே நடந்துகொண்டார் என்றும் அவர் ஏதும் செய்யாமல் இருந்திருக்க வேண்டும் என்றும் ஜடா கூறியுள்ளார்.

ஜடா ஒன்றும் பாதுகாப்புத் தேவைப்படும் பெண் அல்ல என்றும் அவருக்கு எதிரான விமர்சனங்களுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று ஜடாவுக்கு தெரியும் எனவும், இந்தப் பிரச்சினையில் வில் ஸ்மித்துக்கு ஆதரவாக அவர் எப்போதும் நிற்பார் என்றும் கூறியதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in