நடிகை ஜாக்குலின் மனுவை திடீரென திரும்பப் பெற்றது ஏன்?

நடிகை ஜாக்குலின் மனுவை திடீரென திரும்பப் பெற்றது ஏன்?

பயணத்தடையை விலக்கக் கோரி நடிகை ஜாக்குலின் தாக்கல் செய்த மனுவை அவர் திடீரென திரும்பப் பெற்றார்.

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாகக் கூறி இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரித்தது. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.

அவரது ரூ.7 கோடி சொத்துகளும் முடக்கப்பட்டன. இந்நிலையில், மே 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அபுதாபியில் நடக்கும் விருது விழா ஒன்றில் கலந்துகொள்ள இருப்பதாகவும் 15 நாட்களுக்கு பயண தடையை தற்காலிகமாக விலக்க வேண்டும் என்றும் டெல்லி நீதிமன்றத்தில் நடிகை ஜாக்குலின் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஜாக்குலின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றம் எந்த நிபந்தனை விதித்தாலும் ஏற்கத்தயார் என்றும் உறுதி அளித்திருந்தார். இதையடுத்து, அவர் மனுவுக்கு பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 18-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, விருது நிகழ்ச்சி ஜூன் மாதத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறி, தாக்கல் செய்திருந்த மனுவை ஜாக்குலின் திரும்பப் பெற்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in