`அபுதாபி போகணும்; எந்த நிபந்தனை விதித்தாலும் ஏற்கிறேன்'- தடையை நீக்கக் கோரி நடிகை ஜாக்குலின் மனு

`அபுதாபி போகணும்; எந்த நிபந்தனை விதித்தாலும் ஏற்கிறேன்'- தடையை நீக்கக் கோரி நடிகை ஜாக்குலின் மனு

தன் மீதான பயணத்தடையை விலக்கக் கோரி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, ரூ.200 கோடி பணம் பறித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட புகாரில், சிறையில் இருக்கிறார் இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர். இவர், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக, தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஏற்கெனவே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 20-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அவருடன் தொடர்பில் இருந்ததாக , நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அவர் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு, வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டது. அவருடைய ரூ.7.27 கோடி மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில், விருது விழா ஒன்றுக்காக அபுதாபிக்கு செல்ல வேண்டும் என்றும் 15 நாட்களுக்கு தனக்கான பயணத் தடையை விலக்க வேண்டும் எனவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் எந்த நிபந்தனை விதித்தாலும் அதை ஏற்போம் என்று ஜாக்குலினின் வழக்கறிஞர் கூறினார்.

இதையடுத்து இதற்குப் பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை 18-ம் தேதிக்கு தள்ளி வைத்தது. நீதிமன்றம் அனுமதி அளித்தால், அபுதாபியை அடுத்து பிரான்ஸ், நேபாளம் நாடுகளுக்கும் அவர் படப்பிடிப்புக்கு செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in