சினிமாவை விட்டு ஒதுங்கிய நடிகைக்கு ஜாக்பாட்: அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்

சினிமாவை விட்டு ஒதுங்கிய நடிகைக்கு ஜாக்பாட்: அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கும் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'யானை' திரைப்படம் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவரின் நடிப்பில் 'சினம்', 'பார்டர்' உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்த நிலையில் பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் அருண் விஜய் நடிக்கிறார். இந்த படத்தின் ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்க உள்ளார்.

இவர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'மதராசபட்டினம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவராவார். அதைத் தொடர்ந்து '2.0', 'தங்கமகன்', 'தெறி'. ' ஐ' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் திடீரென தனது சொந்த ஊரான லண்டனுக்கு எமி ஜாக்சன் சென்று விட்டார். திருமணம் செய்து கொள்ளாமல் காதலர் ஜார்ஜ் பனாயிடூ என்ற தொழிலதிபருடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு 2019-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

திருமணம் செய்யாமலே குழந்தை பெற்று பரபரப்பைக் கிளப்பிய எமி, காதலரை விட்டு பிரிந்து தன் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் எமி ஜாக்சனை மீண்டும் சினிமாவிற்கு ஏ.எல்.விஜய் அழைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் லண்டனில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in