’வலிமை’யில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறேன்: ஹூமா குரேஸி

நடிகர் ஹூமா குரேஸி
நடிகர் ஹூமா குரேஸி

’வலிமை’ படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறேன் என்று அந்தப் படத்தின் நாயகி ஹூமா குரேஸி தெரிவித்துள்ளார்.

அஜித்குமார் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது .

இதில் நாயகியாக நடித்துள்ள இந்தி நடிகை ஹூமா குரேஸி படம் பற்றி கூறி இருப்பதாவது:

ஹூமா குரேஸி, அஜித்குமார்
ஹூமா குரேஸி, அஜித்குமார்

“இயக்குநர் வினோத், கதையை விவரித்ததும் பிடித்திருந்தது. அதோடு அஜித்துடன் நடிக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். ’பில்லா 2’ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. சில காரணங்களால் முடியவில்லை. அதனால் இந்தப் படத்தில் உற்சாகமாக அவருடன் பணியாற்றினேன்.

இதில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறேன். இதற்கு முன் இப்படியொரு கேரக்டரில் நான் நடித்ததில்லை. அதனால், இதை பெரிய வாய்ப்பாகக் கருதினேன். இதுபோன்ற கேரக்டர்களில் ஹீரோயின்களை பார்ப்பது குறைவு. பொதுவாக கதைகளில் நாயகனும் நாயகியும் காதலில் விழுவது போன்ற காட்சிகள்தான் இருக்கும். இதில் இயக்குநர் வினோத் புதிதாக ஒரு முயற்சியை செய்திருக்கிறார். அது ரசிக்கும்படியாக இருக்கும். இதில் ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்திருக்கிறேன்”.

இவ்வாறு ஹூமா குரேஸி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in