எங்கே கை வைத்தார்கள் என்று சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: பொதுவெளியில் பாலியல் சீண்டலால் சீறிய நடிகை ட்விட்

நடிகை சானியா ஐயப்பன்
நடிகை சானியா ஐயப்பன்

கேரளாவில் திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது பொதுவெளியில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில் நேற்று முன்தினம் ‘சாட்டர்டே நைட்’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக, அப்படத்தில் நடித்த பிரபல நடிகைகளான சானியா ஐயப்பன் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து. அப்போது ரசிகர்களால் நடிகைகள் இருவரும் சுற்றிவளைக்கப்பட்டனர். அந்த நேரத்தில் சிலர் சானியாவின் உடல் பாகங்களில் கைவைத்து பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சானியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பான ஒரு பதிவை நேற்று வெளியிட்டுள்ளார். அதில், , ‘இது மிக மோசமான அனுபவம். எங்கே கை வைத்தார்கள் என்று சொல்லவே அசிங்கமாக இருக்கிறது. இப்போது உங்களுடைய நோய் தீர்ந்துவிட்டதா’? என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், கிரேஸூக்கும் நடந்ததாக சானியா குற்றம் சாட்டியுள்ளதால் பாதிக்கப்பட்ட நடிகைகளிடம் விசாரணை மேற்கொள்ள காவல்துறை முடிவு செய்துள்ளது. பொதுவெளியில் நடிகைகளிடம் ரசிகர்கள் அநாகரீகமாக நடந்துகொண்டது மலையாள திரையுலகில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in