இது ஸ்டுடியோ அல்ல, நிஜ காடு: 'விடுதலை' படப்பிடிப்பு தளத்திலிருந்து சூரி வெளியிட்ட ஸ்டில்ஸ்

இது ஸ்டுடியோ அல்ல, நிஜ காடு: 'விடுதலை' படப்பிடிப்பு தளத்திலிருந்து சூரி வெளியிட்ட ஸ்டில்ஸ்

'விடுதலை' படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனது புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூரி வெளியிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படம் 'விடுதலை'. இப்படத்தின் கதையின் நாயகனாக சூரி நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். விஜய் சேதுபதி, இயக்குநர் கவுதம் வாசுதேவ்மேனன், இயக்குநர் ராஜீவ்மேனன் உள்பட பலர் படத்தில் நடிக்கின்றனர். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' கதையை மையமாக வைத்து 'விடுதலை திரைப்படம்' தயாராகி வருகிறது. காட்டுப்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதால் ரிலீஸ் தேதியில் தாமதமாகி வருகிறது.

இந்நிலையில், 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு நடக்கும் காட்டில் இருந்து சில புகைப்படங்களை நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்."இது ஸ்டுடியோ அல்ல, நிஜ காடு" என அதில் அவர் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in