`அற்புதமான அனுபவம்; இனிமையான நினைவு'‍

விஜய்மில்டனின் கன்னடப் பட ஷூட்டிங் நிறைவு!
`அற்புதமான அனுபவம்; இனிமையான நினைவு'‍
படக்குழுவுடன் விஜய்மில்டன்

தான் இயக்கும் கன்னடப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டதாக, விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.

பிரபல ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன், `அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற படம் மூலம் இயக்குநர் ஆனார். தொடர்ந்து கோலிசோடா, 10 எண்றதுக்குள்ள, கடுகு, கோலிசோடா 2 படங்களை இயக்கினார்.

இப்போது பைராகி ('Bairagee) என்ற கன்னடப் படத்தை இயக்கி வந்தார். இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், அஞ்சலி, தனஞ்ஜெயா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்தப் பட ஷூட்டிங்கின்போது, ‘நான் தமிழ் சினிமாவின் ரசிகன். தொடர்ந்து தமிழ் திரையுலகைக் கவனித்து வருகிறேன்’ என்று கூறியிருந்தார் சிவராஜ்குமார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

சிவராஜ்குமார்
சிவராஜ்குமார்

இந்நிலையில், இதன் படப்பிடிப்பு நேற்றோடு முடிந்துவிட்டது. இதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய் மில்டன் தெரிவித்தார். அற்புதமான அனுபவத்தையும் இனிமையான நினைவுகளையும் இந்தப் படம் தனக்குத் தந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் படத்துக்காக தொடக்கப் பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட இருக்கிறது. ஏராளமான நடன கலைஞர்களுடன் பிரமாண்ட செட் அமைத்து இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட இருக்கிறது என படக்குழுத் தெரிவித்துள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தை இயக்குகிறார் விஜய் மில்டன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in