`சமந்தாவை சம்மதிக்க வைத்ததே நயன்தாரா தான்'- விக்னேஷ் சிவன் ஷேரிங்ஸ்

`சமந்தாவை சம்மதிக்க வைத்ததே நயன்தாரா தான்'- விக்னேஷ் சிவன் ஷேரிங்ஸ்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கக்கூடிய படம் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் எல்லாமே இப்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இயக்குநர் விக்னேஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் ரசிகர்களுடன் இணைந்து உள்ளனர்.

இதில் இயக்குநர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் படக்குழு சார்பாக கலந்து கொண்டனர். இதில் பேசிய விக்னேஷ் சிவன், 'ராம்போவுக்கு கண்மணி, கதிஜா என இருவர் மீது ஒரே சமயத்தில் காதல் வர கூடிய கதை தான் இது. படத்தை பார்க்க வர கூடிய ஆடியன்ஸ் முகம் சுழிக்காமல் குடும்பமாக ஜாலியாக பார்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் இந்த படம் எடுக்கப்பட்டது. நயன்தாரா, சமந்தா என இருவருக்குமே சரிசமமான கதாபாத்திரம். இந்த கதையை நயன்தாராவிடம் தான் முதலில் சொன்னேன். அவருக்கு இந்த கதை மிகவும் பிடிக்கும். எப்போது இதை படமாக்க போகிறோம் என கேட்டு கொண்டே இருப்பார்.

கதிஜாவில் சமந்தா நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்ததும் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனால் கடினமாக இருந்தது. பிறகு நயன்தாரா தான் சமந்தாவிடம் கதையின் ஒரு வரியை சொல்லி, இருவரும் சேர்ந்து நடித்தால் சூப்பராக இருக்கும் என அவரை கன்வின்ஸ் செய்து என்னுடனான மீட்டிங்குக்கு சம்மதிக்க வைத்தார். எல்லாருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன். நாளை முதல் காட்சி 4 மணிக்கு. முதல் காட்சி பார்த்து விட்டு 8 மணிக்கு ஆடியன்ஸ் வரும் போது படத்தின் ரிசல்ட் தெரிந்து விடும். கொஞ்சம் படபடப்பாக இருக்கிறது" என்றார்.

மேலும் அனிருத்துடன் பணிபுரிவது குறித்து பகிரும் போது, "அனிருத்துக்கு இந்த கதை முன்பே தெரியும். எங்கள் நட்பு அழகானது. எனக்கும் நெல்சனுக்கு சரி ரொம்ப மன அழுத்தமாக இருந்தால் அனிருத் ஸ்டுடியோவுக்கு சென்று விடுவோம். எங்களுடைய பீச், பார் என ஹேங்கவுட் ப்ளேஸ் எல்லாமே அனிருத் ஸ்டுடியோதான். அந்த நட்பே அழகான பாடலை இசையை கொண்டு வந்து விடுகிறது.

இந்த படம் கரோனாவால் தியேட்டரில் வெளியாகாமல் போய் விடுமோ அப்படியே வந்தாலும் கூட்டம் இல்லாமல் என பயந்தேன். அதை தாண்டி இப்போது மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்த்து சிரித்து கைத்தட்டும் அந்த தருணத்திற்காக காத்து கொண்டிருக்கிறேன். அனைத்து படங்களும் எனக்கு ஸ்பெஷல் தான். ஆனால், இந்த படம் எனக்கு இன்னும் ஸ்பெஷல்" என நெகிழ்ச்சியாக பேசினார்.

அனிருத்தும் விக்னேஷ் சிவனின் இயக்கம் குறித்தும் படம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் ரசிகர்களுடனும் படக்குழு உரையாடியது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த ட்விட்டர் ஸ்பேஸ் நடந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in