`சத்யராஜுடன் காட்சி இல்லாதது வருத்தம்தான்'

`ராதே ஷியாம்' பட நிகழ்ச்சியில் பூஜா ஹெக்டே பேச்சு
பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

`ராதே பாத்திரம் எனக்கு மிக சிறப்பானதொரு பாத்திரம். சத்யராஜ் சாருடன் காட்சி இல்லாதது வருத்தம்" என்று நடிகை பூஜா ஹெக்டே கூறினார்.

யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ராதே ஷியாம். 1970களில் ஐரோப்பாவில் நடக்கும் கதை. கைரேகை நிபுணராக வித்தியாசமான பாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருக்கிறார். நடிகர் அமிதாப் பச்சன் குரல் கொடுத்திருக்கிறார். அதிநவீன விஷுவல் எஃபெக்ட்கள், இத்தாலி, ஜார்ஜியா மற்றும் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ள அழகிய காட்சிகள். பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேக்கு இடையேயான பற்ற வைக்கும் கெமிஸ்ட்ரி என பல்வேறு காரணங்களுக்காக இந்த காதல் கதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த வருடத்தில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பிரமாண்டமான படங்களில் ஒன்று ராதே ஷ்யாம். பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடித்துள்ள இப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில், தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகை பூஜா ஹெக்டே, "நாங்கள் கடந்த 5 வருடங்களாக உழைத்த உழைப்பு உங்களுக்காக உருவாக்கிய காதல் கதை உங்களிடம் வந்துள்ளது. இந்த கடின காலத்தை தாண்டி, இந்த படத்தை எடுத்து வந்துள்ளோம்.

பிரமோத் மிக பிரமாண்டமாக படத்தை உருவாக்கியிருக்கிறார. ராதே பாத்திரம் எனக்கு மிக சிறப்பானதொரு பாத்திரம். சத்யராஜ் சாருடன் காட்சி இல்லாதது வருத்தம். பிரபாஸ் மிகச்சிறப்பான ஒத்துழைப்பு தந்தார். மனோஜ் உடன் பீஸ்ட் படமும் செய்கிறேன். இந்தப்படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்" என்றார்.

நடிகர் பிரபாஸ் பேசுகையில், "சத்யராஜ் என் செல்ல கட்டப்பா, அவருடன் மிர்ச்சி படம் முதல் முறையாக பண்ணினேன். அது சூப்பர் டூப்பர் ஹிட், அதன் பிறகு பாகுபலி, இப்போது இந்த படத்தில் ஒரு அருமையான பாத்திரம் செய்துள்ளார். இது அருமையான காதல் கதை. ஆக்சனும் இருக்கிறது. காதல் கதைக்கு மியூசிக் முக்கியம் ஜஸ்டின் அற்புதமான இசையை தந்துள்ளார்.

இந்த படத்தின் நாயகன் மனோஜ் சார் தான் என்னை அத்தனை அழகாக காட்டியுள்ளார். எல்லோரும் விஷுவலை பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு நன்றி. எல்லாம் மனோஜ் சாருக்கு தான். இந்தப்படத்தில் பூஜா மிக அழகாக இருக்கிறார். கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியுள்ளது. பிரமோத் என்னை வச்சு லவ் ஸ்டோரி எடுத்திருக்கிறார். இயக்குநர் பாகுபலிக்கு முன்பே இந்த கதையை சொன்னார். எப்படி என்னை காதல் கதையில் யோசித்தார் என தெரியவில்லை. 5 வருடம் நீண்ட பயணம் ராதே ஷ்யாம் மிக நல்ல படமாக இருக்கும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in