'தயாரிப்பாளராக பெண்கள் இருப்பது எளிதானதல்ல'

'தயாரிப்பாளராக பெண்கள் இருப்பது எளிதானதல்ல'
ஷர்மிளா மந்த்ரே

``தயாரிப்பாளராக பெண்கள் இருப்பது எளிதானதல்ல'' என்று நடிகை ஷர்மிளா மந்த்ரா தெரிவித்துள்ளார்.

தமிழில் ஆர்.மாதேஷ் இயக்கிய ’மிரட்டல்’படத்தில் நாயகியாக நடித்தவர், கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரே. இவர், விமல், ஆஸ்னா ஜாவேரி நடித்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தை தயாரித்தார். அடுத்து, நானும் சிங்கிள்தான், சண்டக்காரி ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில், திரைப்படத் தயாரிப்பாளராக ஒரு பெண் இருப்பது எளிதானதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஷர்மிளா மந்த்ரே
ஷர்மிளா மந்த்ரே

இதுபற்றி அவர் கூறுகையில், ``சினிமாவில் ஒரு நடிகையாக நான் பல சவால்களைச் சந்தித்தேன். அதை மறுப்பதற்கில்லை. என் 16 வயதில் சினிமா வாழ்க்கையை தொடங்கியதில் இருந்து அதை எதிர்கொண்டேன். இது இங்கு வழக்கமானது என்று கட்டுப்படுத்திக் கொண்டேன்.

ஆனால் ஒரு தயாரிப்பாளராக நான் மாறியதும் எல்லாம் மாறியிருக்கும் என்று எல்லோரும் நினைக்கலாம். ஆனால், பெண் தயாரிப்பாளராக, ஒரு பாஸாக இருப்பது பலரை காயப்படுத்துகிறது. அதிருஷ்டவசமாக சமீப காலங்களில் சில அற்புதமான நடிகர்கள், டெக்னீஷியன்கள் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அவர்கள் என்னை சிறப்பாக வழிநடத்தினார்கள். இதற்காக என் குடும்பத்தினர், நண்பர்களுக்கு நன்றி. பெண்கள் தங்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம்'' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in