‘வெந்து தணிந்தது காடு’ வெற்றிக்காக கூல் சுரேஷ்க்கு பரிசு கொடுத்த தயாரிப்பாளர்!

‘வெந்து தணிந்தது காடு’ வெற்றிக்காக கூல் சுரேஷ்க்கு பரிசு கொடுத்த தயாரிப்பாளர்!

சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்காக கூல் சுரேஷ்க்கு , படத்தின் தயாரிப்பாளர் பரிசு வழங்கியுள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘ வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் செப்டம்பர் 15 ம் தேதி வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த சூழலில், “வெந்து தணிந்தது காடு...சிம்புவுக்கு வணக்கத்தைப் போடு” என செல்லுமிடமெல்லாம் இந்த படத்த்தின் பெயரையே வேறு வேறு மாடுலேசனில் சொல்லி படத்தின் பெயரை எல்லோரின் மனதிலும் பதிய வைத்தார் கூல் சுரேஷ். இப்போது படத்தின் வெற்றிக்குப் பின்னர், இப்படத்துக்கு விளம்பரம் செய்த கூல் சுரேஷ்க்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒரு ஐபோனை பரிசாக வழங்கியுள்ளார்.

ஏற்கெனவே படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நடிகர் சிம்புவுக்கு உயர் ரக சொகுசு காரும், கௌதம் மேனனுக்கு ராயல் என்பீல்டு புல்லட்டும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தரப்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in