பிரபல கிரிக்கெட் வீரருடன் விஜே ரம்யா 2வது திருமணம்?: புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜே ரம்யா
விஜே ரம்யா

விஜே ரம்யா பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருவதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் விஜே ரம்யா ‘ஓகே கண்மணி’, ‘சங்கத்தமிழன்’, ‘கேம் ஓவர்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு உண்பதில் அதிக அக்கறை கொண்டவரான ரம்யா, உணவு ஊட்டச்சத்து நிபுணராகவும் வலம் வருகிறார். இவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

ஆனால், தம்பதிகளுக்குள்ளே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து நடந்தது. இதனை அடுத்து, விஜே ரம்யா பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.

ஆனால், அதில் துளிகூட உண்மையில்லை எனவும் அந்தப் புகைப்படம் நிகழ்வு ஒன்றில் எடுத்தது எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதைத்தான் ஒரு சிலர் இப்படித் தவறாக சித்தரித்து பரப்பி வருகின்றனர் எனவும் ரம்யாவின் ரசிகர்கள் இதை தெளிவுப்படுத்தியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in