கமல்ஹாசன் படத்தில் உதயநிதிக்கு பதில் விஜய்சேதுபதி?

கமல்ஹாசன் படத்தில் உதயநிதிக்கு பதில் விஜய்சேதுபதி?

கமல்ஹாசன் படத்தில் இருந்து உதயநிதி விலகிய நிலையில் இனி விஜய்சேதுபதி அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடிக்க இருக்கும் படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது உதயநிதி அமைச்சராகி விட்டதால், இனி படங்களில் இருந்து நடிப்பதை நிறுத்தப் போவதாகவும் தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படமே அவரது கடைசி படம் எனவும் தெரிவித்தார். மேலும், கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க இருக்கும் படத்தில் இருந்தும் விலகுவதாகவும் உதயநிதி தெரிவித்தார்

இந்த நிலையில், கமல் படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்சேதுபதியை அணுகி இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இன்னும் எந்த தகவலும் உறுதியாகவில்லை என்கிறது படக்குழு தரப்பு. விஜய்சேதுபதி நடிப்பது உறுதியானால், அது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ஏற்கெனவே, ‘விக்ரம்’ படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதி இணைந்து நடித்தார். தற்போது விஜய்சேதுபதி பாலிவுட் படங்களில் பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in