கார்த்தியுடன் நடிக்கிறார் விஜய் சேதுபதி?

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

கார்த்தி நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும் படம், ‘சர்தார்’. இதில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடிக்கின்றனர். சிம்ரன், இந்தி நடிகர் சங்கி பாண்டே, முரளி சர்மா, இளவரசு உள்பட பலர் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.

கார்த்தி
கார்த்தி

இதையடுத்து ராஜூ முருகன் இயக்கும் படத்தில், கார்த்தி நடிக்கிறார். இந்தப் படத்தை ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. படம் பற்றிய அறிவிப்பு ஏப்ரல் 14 -ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. மே மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய படங்களை அடுத்து ராஜூ முருகன், கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

ராஜூ முருகன்
ராஜூ முருகன்

இதற்கிடையே, இந்தப் படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விஜய் சேதுபதி பல படங்களில் ஒப்பந்தம் ஆகி இருப்பதால், அவர் இன்னும் முடிவை சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in