அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறாரா த்ரிஷா?- புதுத் தகவல்

த்ரிஷா
த்ரிஷா

அஜித், விக்னேஷ்சிவன் படத்தில் நடிகை த்ரிஷா இருக்கிறாரா, இல்லையா? என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

‘பொன்னியன் செல்வன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை த்ரிஷாவின் படங்கள் குறித்தான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் இணையும் ‘தளபதி 67’ படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். கிட்டத்தட்ட இது உறுதியான நிலையில் படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். நடிகை விஜய்க்கு அடுத்தப் படத்தில் த்ரிஷா ஜோடியாவது போலவே, விக்னேஷ்சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திலும் த்ரிஷா ஜோடி ஆகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால், தற்போது அஜித் படத்தில் த்ரிஷா நடிக்கவில்லை என்கிறது படக்குழு.

’’தளபதி 67’ படத்தில் நடிகை த்ரிஷா நடிப்பது உறுதி. அந்தப் படத்திற்காக அவர் மிக அதிக நாட்கள் ஒதுக்கி இருக்கிறார். அஜித் படத்தின் கதாநாயகி இறுதி செய்யப்பட இருக்கிறார். ஆனால், அது நிச்சயம் த்ரிஷா இல்லை’ என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அஜித்துடன் ஜி, மங்காத்தா, கிரீடம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார் த்ரிஷா. விஜய்யுடன் திருப்பாச்சி, கில்லி உள்ளிட்டப் பல ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார் த்ரிஷா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in