`மிஷன் இம்பாசிபிள்’ படங்களில் இருந்து விலகுகிறாரா டாம் குரூஸ்?

`மிஷன் இம்பாசிபிள்’ படங்களில் இருந்து விலகுகிறாரா டாம் குரூஸ்?

'மிஷன் இம்பாசிபிள்’ வரிசை படங்களில் இருந்து டாம் குரூஸ் விலகப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ். இவர் நடிப்பில் வெளியான 'மிஷன்: இம்பாசிபிள்' வரிசைப் படங்களுக்கு ரசிகர்களிடையே தனி வரவேற்பு உண்டு. இந்தப் படங்கள் மூலம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் மனங்களில் ஆழமாக இடம் பிடித்தவர் டாம் குரூஸ். அவருடைய ரிஸ்க்கான ஆக்‌ஷன் காட்சிகளை காண ரசிகர்கள் தவம் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இவர், ’மிஷன் இம்பாசிபிள்’ வரிசை படங்களில் இருந்து விலகப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 20 வருடங்களில், இதுவரை ஆறு ’மிஷன் இம்பாசிபிள்’ வரிசை படங்கள் வெளியாகியுள்ளன.

முதல் படம், 1996-ம் ஆண்டு வெளியானது. ’மிஷன் இம்பாசிபிள் - டெட் ரெக்கோனிங் பார்ட் 1’ அடுத்த வருடமும், இந்தப் படத்தின் பார்ட் 2 , 2024-ம் ஆண்டும் வெளியாக இருக்கின்றன. அதோடு இந்தப் படங்களின், எதன் ஹன்ட் (Ethan Hunt) கேரக்டருக்கு விடை கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம் டாம் குரூஸ். கடைசிப் படத்தில் அதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், ’மிஷன் இம்பாசிபிள்’ இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குயர்ரி இதை மறுத்துள்ளார். ’டாம் குரூஸுடன் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். இதில் எதுவும் உண்மையில்லை. இந்த வதந்திகளை சிலர் வேண்டுமென்றே வெளியிடுகிறார்கள். அவர்களுக்கு ஏதும் குறிப்பிட்ட காரணம் இருக்கும் ’ எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in