ஷங்கர்- ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் இதுதானா?

தில் ராஜூ, ஷங்கர், ராம் சரண்
தில் ராஜூ, ஷங்கர், ராம் சரண்ஷங்கர்- ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் இதுதானா?

நடிகர் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ’ஆர்சி 15’. பான் இந்திய படமாக உருவாகி வரும் இது சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அரசியல் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக வெளியாக உள்ளது. இந்தப் படத்தை டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். இப்படத்தின் அடுத்த ஷெட்யூல் இம்மாதம் 19 அல்லது 20-ம் தேதி தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. இதில் அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த், நவீன்சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த புதிய ஷெட்யூலில் ராம்சரண், கியாரா அத்வானி வைத்து ஒரு பாடலை பிரம்மாண்டமாக படமாக ஷங்கர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்காக கலை இயக்குநர் அவினாஷ் கொல்லா இயக்கத்தில் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் தயாராகி வருகிறது.

இதனிடையே இப்பாடல் சுமார் பத்து கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் பட பாணியில் இந்த பாடல் கலக்கலாக இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் பாடலின் படப்பிடிப்பு சுமார் பத்து நாட்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலுக்குப் பிறகு அடுத்த ஷெட்யூல் ஏப்ரல் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

’ஆர்சி 15’ படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் வரும் மார்ச் 27-ம் தேதி ராம்சரண் பிறந்தநாளில் வெளியாகும் என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு ’சிஇஓ’ போன்ற தலைப்புகள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in