விக்ரம் நடிக்கும் `கோப்ரா' படத்தின் கதை இதுதானா?

விக்ரம் நடிக்கும் `கோப்ரா' படத்தின் கதை இதுதானா?

நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் கதைச்சுருக்கம் வெளியாகியுள்ளது. இதை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் கோப்ரா.

இந்தத் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இன்று வெளியாக இருந்த `கோப்ரா' திரைப்படம் சில காரணங்களுக்காக தள்ளிப் போயுள்ளது. பட ரிலீஸிற்கு சில தினங்களே இருக்கும் நிலையில் `கோப்ரா' படத்தின் கதை சுருக்கம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிரபல துருக்கிய இன்டர்போல் அதிகாரி ஒருவர், மிக உயர்ந்த அதிகாரமுள்ள உலகத் தலைவர்களின் தடயங்கள் அற்ற படுகொலைகளை அரங்கேற்றும் குற்றவாளியைப் பின் தொடர்கிறார். அவர் நீண்டகாலமாக தேடப்படும் குற்றவாளி. `கோப்ரா' செய்யும் கொலைகளின் உண்மையான நோக்கத்தை படத்தின் பின்பகுதி விளக்கும் எனவும் ஆரூடம் சொல்கிறார்கள் நெட்டிசன்கள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in