நடிகர் விஜய்யின் எச்சரிக்கைக்கு இதுதான் காரணமா?

நடிகர் விஜய்யின் எச்சரிக்கைக்கு இதுதான் காரணமா?

ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்து நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டது ஏன்? என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகர் விஜய் நடித்துள்ள `பீஸ்ட்' படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. அதில், காவி துணியை விஜய் கிழிப்பதுபோன்ற காட்சி இருந்தது. இதை வைத்து அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டனர். சங்கிகளுக்கு சங்கு என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதோடு, சர்ச்சைக்கு வழிவகுத்தது. படமே இன்னும் வெளியாகாத நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பாமக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "அரசியல் கட்சித் தலைவர்களை மற்றும் யாரையும், எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளில், இணையதளங்களில் போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ மீம்ஸ் உள்ளீட்டை எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது. விஜய்யின் அறிவுறுத்தலை யாரேனும் மீறினால் அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று எச்சரித்துள்ளார்.

இந்த எச்சரிக்கை அறிக்கையை விஜய் வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. காவி நிற பேனரில் பிரதமர் மோடியின் போட்டோ இருப்பது போன்றும் அதை விஜய் கத்தியால் கிழிப்பதுபோன்றும் போட்டோஷாப் செய்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து பாஜகவை சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.