லோகேஷ் கனகராஜ் கதையை நிராகரித்தாரா பிரபல ஹீரோ ?

லோகேஷ் கனகராஜ் கதையை நிராகரித்தாரா பிரபல ஹீரோ ?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதையை, பிரபல பான் இந்தியா ஹீரோ நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

’மாநகரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அடுத்து கார்த்தியின் `கைதி', விஜய்யின் 'மாஸ்டர்' படங்களை இயக்கிய இவர், இப்போது கமல்ஹாசன் நடித்துள்ள ’விக்ரம்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உட்பட பலர் நடித்துள்ளனர். ’விக்ரம்’ படம் ஜூன் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதையடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கிடையே அவர், பிரபல பான் இந்தியா ஸ்டாரான பிரபாஸை சந்தித்து கதைச் சொன்னதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் பிரபாஸை சந்தித்துள்ள லோகேஷ் கனகராஜ், ஆக்‌ஷன் கதை ஒன்றை அவருக்குக் கூறினார். கதையை கேட்ட பிரபாஸ், இது வழக்கமான கதையாக இருப்பதாகக் கூறி , இன்னும் பிரம்மாண்ட கதை தேவை என்று அவர் சொன்ன கதையை நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகுபலிக்குப் பிறகு, பான் இந்தியா நட்சத்திரமாக இருக்கும் நடிகர் பிரபாஸின், சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் ஹிட்டாக வில்லை. அடுத்து ஆதிபுருஷ், சலார், நாக் அஸ்வின் இயக்கும் படங்களில் அவர் நடித்து வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in