`மார்க் ஆண்டனி’யில் விஷால் ஜோடியாகும் பிரபல ஹீரோயின்!

`மார்க் ஆண்டனி’யில் விஷால் ஜோடியாகும் பிரபல ஹீரோயின்!

விஷால் நடிக்க இருக்கும் ’மார்க் ஆண்டனி’ படத்தில் தெலுங்கு நடிகை நாயகியாக நடிக்க இருக்கிறார்.

’வீரமே வாகை சூடும்’ படத்துக்குப் பிறகு நடிகர் விஷால், 'லத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். வினோத்குமார் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வந்தது. அங்கு ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கி வந்தனர். இப்போது இதன் ஷூட்டிங் நாகர்கோவிலில் நடக்க இருக்கிறது. இதையடுத்து நடிகர் விஷால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ’மார்க் ஆண்டனி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

ரிது வர்மா
ரிது வர்மா

’த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ’பாஹீரா’ படங்களை இயக்கியுள்ள ஆதிக் ரவிச்சந்திரன், இப்போது விஷாலை இயக்க இருக்கிறார். 'எனிமி' படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் உருவாக உள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

ரிது வர்மா
ரிது வர்மா

இதன் ஒரு பகுதி கதை 1970-களில் நடப்பது போல அமைந்துள்ளதால், அப்போதிருந்த சென்னையை அப்படியே கண்முன் கொண்டு வர இருக்கின்றனர். இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்படுகிறது. விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ள நிலையில் விஷால் ஜோடியாக நடிக்க சில நடிகைகளிடம் பேசிவந்தனர். இப்போது ரிது வர்மா நடிக்க இருப்பதாகத் தெரிகிறது.

தெலுங்கு நடிகையான இவர், தமிழில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

Related Stories

No stories found.