விஜயின் அடுத்த பட ஹீரோயின் இவர்தானா?

விஜயின் அடுத்த பட ஹீரோயின் இவர்தானா?

நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் ’குஷி ’என்ற படத்தில் நடித்துவருகிறார். ஷிவா நிர்வாணா இப்படத்தை இயக்குகிறார். ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா உட்பட பலர் நடிக்கின்றனர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி முரளி ஒளிப்பதிவு செய்கிறார்.

இதற்கிடையே புராணக் கதையைக் கொண்ட ‘சாகுந்தலம்’ எனும் படத்தில் சமந்தா நடித்து முடித்துள்ளார். தெலுங்கு இயக்குநர் குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. இந்தப் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. இதற்கிடையே ஹரி - ஹரீஷ் இயக்கும் ’யசோதா’ என்ற த்ரில்லர் படத்திலும் சமந்தா நடித்து வருகிறார். அத்துடன் நடிகை டாப்ஸி தயாரிக்கும் படம் உட்பட சில படங்களில் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையே அவர் நடிகர் விஜய் ஜோடியாக மீண்டும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடித்துவரும் விஜய், அதை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜின் படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி விசாரித்தபோது, ‘இது தொடர்பாக இன்னும் ஏதும் முடிவாகவில்லை. ஹீரோயின் பற்றி முடிவு செய்ய நாட்கள் இருக்கிறது’ என்று படக்குழுவினர் தெரிவித்தனர். ஏற்கனவே ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களில் விஜய் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in