டீசருக்குக் கிடைத்த எதிர் விமர்சனங்கள்: தள்ளிப்போகிறதா 'ஆதிபுருஷ்’ வெளியீடு?

டீசருக்குக் கிடைத்த எதிர் விமர்சனங்கள்: தள்ளிப்போகிறதா 'ஆதிபுருஷ்’ வெளியீடு?

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் டீசருக்கு கிடைத்த மோசமான விமர்சனத்தால் படத்தின் வெளியீடுத் தள்ளிப்போக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. அடுத்த வருடம் சங்கராந்தி விடுமுறை தினத்தை ஒட்டி படம் வெளியிடத் திட்டமிட்டு இருந்தனர்.

ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்தப் படத்தை ஓம் ராவத் இயக்கி இருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சனோன் நடிக்கிறார்.

சமீபத்தில், ‘ஆதிபுருஷ்’ படத்தின் டீசர் வெளியானது. மோசமான கிராஃபிக்ஸ் காட்சிகள் என இணையத்தில் இது கடுமையான விமர்சனங்களைப் பார்வையாளர்களிடம் இருந்து எதிர்கொண்டது. இதனால், படத்தின் வெளியீடு தள்ளிப் போக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டீசருக்குப் பார்வையாளர்களிடம் இருந்து கிடைத்த விமர்சனம் காரணமாக மீண்டும் கிராஃபிக்ஸ் பணிகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப் போய் அடுத்த வருடம் கோடைவிடுமுறைக்கு படம் வரும் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், படக்குழு தரப்பில் இருந்து இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு ’சாஹோ’, ‘ராதே ஷ்யாம்’ என நடிகர் பிராபாஸின் வெளியான அனைத்துப் பான் இந்தியா படங்களும் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில், ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசரும் மோசமான விமர்சனத்தை பெற்றிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in