கதாநாயகி அவதாரம் எடுக்கிறாரா சூப்பர் சிங்கர் பாடகி?

கதாநாயகி அவதாரம் எடுக்கிறாரா சூப்பர் சிங்கர் பாடகி?

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற பாடகி பிரியங்கா சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள், பாடகிகள் திரைப் பிரபலங்களாகியுள்ளனர். இதற்காகவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பலத்த போட்டி நிலவி வருகிறது.
இந்த நிகழ்ச்சி மூலம் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவர் பிரியங்கா. பாடகி சித்ராவின் பரம ரசிகையான பிரியங்கா அவ்போது பாடல்களைப் பாடி சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். இதற்கென தனி ரசிகர் பட்டாளதே அவருக்கு உண்டு.

மருத்துவரான பிரியங்கா தற்போது திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக செய்தி கசிந்துள்ளது. இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாக உள்ள 'பிசாசு 2' படத்தின் புரொமோஷனுக்காக ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் பிரியங்கா பாடி, நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in