பிரபல நடிகையை காதலிக்கிறாரா சமந்தாவின் முன்னாள் கணவர்?

பிரபல நடிகையை காதலிக்கிறாரா சமந்தாவின் முன்னாள் கணவர்?

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர், பிரபல நடிகையை காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. இவர் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவரும் நடிகை சமந்தாவும் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்தார் சமந்தா.

சமந்தா, நாக சைதன்யா
சமந்தா, நாக சைதன்யா

இந்நிலையில் கடந்த வருடம் இருவரும் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்போது இருவரும் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதை அவர் தரப்பு மறுத்திருந்தது.

ஷோபிதா துலிபாலா
ஷோபிதா துலிபாலா

இதற்கிடையே நாக சைதன்யா மீண்டும் காதலில் விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் நடிகை ஷோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. நாக சைதன்யா, ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் கட்டி வரும் புதிய வீட்டை இருவரும் சேர்ந்து பார்த்ததாகவும் சில மணி நேரங்களுக்குப் பிறகு ஒரே காரில் இருவரும் சென்றதாகவும் இருவரும் ஒன்றாக அடிக்கடி சுற்றுவதாகவும் கூறப்படுகிறது.

ஷோபிதா துலிபாலா, நாக சைதன்யா
ஷோபிதா துலிபாலா, நாக சைதன்யா

’மேஜர்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷோபிதாவை, நாக சைதன்யா பலமுறை சந்தித்தார் என்றும் இதையடுத்தே இவர்கள் காதலில் விழுந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகை ஷோபிதா துலிபாலா, அனுராக் காஷ்யப் இயக்கிய ராமன் ராகவ் 2.0 என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து செஃப், காலகாண்டி, கோஸ்ட் ஸ்டோரிஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் கூடாச்சாரி, மேஜர் படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in