ஷங்கர் இயக்கத்தில் வில்லன் ஆன எஸ்.ஜே.சூர்யா?

நடிகர் எஸ்.ஜே.சூர்யா
நடிகர் எஸ்.ஜே.சூர்யா

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கும் படத்தில், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழில் வாலி, குஷி, நியூ உள்ளிட்ட சில படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா நாயகனாகவும் நடித்து வந்தார். தற்போது வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். மகேஷ்பாபுவின் ’ஸ்பைடர்’ படத்தில் சைக்கோ வில்லனாக மிரட்டிய எஸ்.ஜே.சூர்யா, விஜய்யின் ’மெர்சல்’ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் வில்லன் நடிப்பு பாராட்டப்பட்டது.

ராம் சரண், ஷங்கர், தில் ராஜூ
ராம் சரண், ஷங்கர், தில் ராஜூ

இதை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அவர் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க ரூ.7 கோடி சம்பளம் கேட்டதாகச் செய்திகள் வெளியாயின. இந்நிலையில், அவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கும் படத்தில் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கில் ஷங்கர் உருவாக்கும் படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கிறார். இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். தில் ராஜூ தயாரிப்பில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் ஜெயராம், ஸ்ரீகாந்த், அஞ்சலி, சுனில் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in