
‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘ப்ரின்ஸ்’ படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் பத்திரிகையாளராக நடிக்க, சிவகார்த்திகேயன் கார்ட்டூனிஸ்ட்டாக நடிக்கிறார். இதற்கடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவியுடன் நடிக்கிறார். இதுபோக, கமல்ஹாசன் தயாரிப்பிலும் நடிக்க இருக்கிறார். மேலும் இவரது ‘அயலான்’ திரைப்படத்திற்கான கிராஃபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ‘வாரிசு’ தயாரிப்பாளரான தில்ராஜூ தயாரிப்பில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘வாரிசு’ படத்தை அடுத்து தமிழ், தெலுங்கு என பைலிங்குவலாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஹரிஷ்- ஷங்கர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இன்னும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.