சீரியல் நடிகை மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறாரா?- வைரல் புகைப்படம்!

சீரியல் நடிகை மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறாரா?- வைரல் புகைப்படம்!

சீரியல் நடிகை மகாலட்சுமி மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்கள் அவரது சமீபத்திய புகைப்படத்தில் கமென்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளருமான ரவீந்திரன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திடீர் திருமணம் ரசிகர்களிடையே பேசு பொருளானது. பல விமர்சனங்களைத் தாண்டி இருவரும் புகைப்படங்களையும் தங்களது மகிழ்ச்சியானத் தருணங்களையும் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். மேலும் திருமணத்திற்குப் பிறகு ரவீந்திரன் மகாலட்சுமிக்கு கார், நகை உள்ளிட்ட பல பரிசுகளையும் கொடுத்தார்.

அந்த வகையில் சமீபத்தில் மகாலட்சுமி மற்றும் ரவீந்திரன் இருவரும் உணவு உண்ணும்படியான புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தனர். இந்தப் புகைப்படத்தில் மகாலட்சுமியைப் பார்த்து விட்டு, அவர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரா என்ற ரீதியிலான கமென்டுகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

முதல் திருமணத்தில் நடிகை மகாலட்சுமிக்கு ஒரு மகன் இருக்கிறார் என்ற நிலையில் தற்போது ரவீந்திரனுடன் நடந்த திருமணத்தில் அவர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து இருவரும் இன்னும் மறுக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in