ஒரே நேரத்தில் 3 பாலிவுட் படங்களில் சமந்தா?

ஒரே நேரத்தில் 3 பாலிவுட் படங்களில் சமந்தா?

ஒரே நேரத்தில் மூன்று பாலிவுட் படங்களில் நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் ’குஷி ’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. குணசேகர் இயக்கியுள்ள ‘சாகுந்தலம்’, ஹரி - ஹரீஷ் இயக்கும் ’யசோதா’ படங்களை அவர் முடித்துவிட்டார். அடுத்து டாப்ஸி தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே அவருடைய பாலிவுட் அறிமுகம் பற்றி அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

’ஃபேமிலிமேன் 2’ வெப் தொடரில் நடித்ததன் மூலம் சமந்தா இந்தியிலும் பிரபலமானார். ’புஷ்பா’ படத்தில் அவர் ஆடிய பாடலும் இந்தி ரசிகர்களிடையே புகழைப் பெற்று தந்துள்ளது. இதற்கிடையே இந்தி நடிகர் ரன்வீர் சிங் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். இதனால் அவருடன் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனமான, தர்மா புரொடக்‌ஷன்ஸுடன் நடிகை சமந்தா ஒப்பந்தம் செய்துள்ளார் என்றும் அக்‌ஷய் குமார் ஜோடியாக அவர் இந்தியில் அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இவை எதுவும் உறுதிப் படுத்தப் படவில்லை.

இந்நிலையில் அவர் மூன்று பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக மும்பையில்தான் அவர் அதிக நேரம் செலவிடுவதாகவும் விரைவில் இந்தப் படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in